ஆ.ராசா 48 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழக முதல்வர் பழனிசாமி பற்றி திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்திருந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆ.ராசா தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்திருந்தார். அதற்குப் பிறகு நடைபெற பிரச்சார கூட்டத்தில் ஆ.ராசாவின் கருத்தை குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி கண் கலங்கினார். இதனால் ஆ.ராசா மன்னிப்பு கோரியிருந்தார்.

மேலும் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக ஆ.ராசாவிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. தன்னுடைய கருத்தில் எந்த வித உள்நோக்கமும் இல்லையென்றும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆ.ராசா 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும் திமுகவின் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவை நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.