‘மனசாட்சி இருந்ததால்தான் ஆ.ராசா மன்னிப்பு கேட்டார் - ஆனால் பிரதமர் என்ன செய்தார்?’ - கனிமொழி
திமுகவுக்கு மனசாட்சி இருந்ததால் தான் தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டார் என்று திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது, “உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தை மோடி கண்டித்தாரா? இல்லையே? பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது அந்த விவகாரம் பற்றி முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தாரா? பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியபோது அதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. திமுகவுக்கு மனசாட்சி உணர்வு இருந்ததால்தான் தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பிரச்சாரத்தில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, ஆ.ராசா அவரின் பேச்சு குறித்து விளக்கமளித்ததோடு, முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.