விலங்கியல் பூங்காவில் இரட்டை தலையுடன் பிறந்த அறிய வகை ஆமை

Viral Video India
By Thahir Sep 13, 2022 01:16 PM GMT
Report

ஓடிசா மாநிலத்தில் உள்ள நந்தன்கானன் விலங்கியல் பூங்காவில் இரட்டை தலையுடன் அறிய வகை ஆமை பிறந்துள்ளது.

இரட்டை தலை ஆமை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் விலங்கியல் பூங்காவில் சிவப்பு காது ஸ்லைடர் இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று இரண்டு ஆமை குஞ்சுகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆமை குஞ்சு இரட்டை தலைகளுடன் பிறந்துள்ளது.

விலங்கியல் பூங்காவில்  இரட்டை தலையுடன் பிறந்த அறிய வகை ஆமை | Rare Two Headed Turtle Born At Odisha

இதுகுறித்து நந்தன்கானன் விலங்கியல் பூங்காவின் துணை இயக்குநர் சஞ்சீத் குமார் கூறுகையில், சிவப்பு காது ஸ்லைடர் இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று இரண்டு குஞ்சுகளை ஈன்றுள்ளது. குஞ்சுகளில் ஒன்று சாதாரணமாக இருந்தாலும், மற்றொன்றுக்கு இரண்டு தலைகள் உள்ளன.

இது ஒரு அரிதான சம்பவம் என்றும், மரபணுக் கோளாறால் ஏற்பட்ட பாதிப்பு என்றும் அவர் கூறினார். “இதுபோன்ற சவாலை நாங்கள் முதல்முறையாக எதிர்கொள்கிறோம். விலங்கியல் பூங்காவின் கண்காணிப்பாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள், குஞ்சுகளின் உயிரைக் காப்பாற்ற இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பூங்காவில் உள்ள பெட்டியில் ஆமை குட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.