சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரிய பொக்கிஷங்கள்? காட்டுத்தீயாய் பரவிய வதந்தி
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரிய பொக்கிஷங்கள் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மேற்கு கோபுரம் கற்பக விநாயகர் கோவில் உள்ளது, இதன் எதிரில் உள்ள பைரவர் கோவிலுக்கு கீழ் புதிய பூங்கா அமைக்க 5 மாதங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது அங்கு பழங்கால மண்டபம் தென்பட்டுள்ளது, இந்த படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பள்ளம் தோண்டும் போது பழங்கால பஞ்சலோக சிலைகளும், அரிய பொக்கிஷங்களும் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர் கூறுகையில், பள்ளம் தோண்டும் போது அரிய பொருட்கள் கிடைத்ததாக வதந்திகள் பரவகின்றன, அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
மேற்கு கோபுர உள் வாயிலில் கீழ் மட்டத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் இருந்திருக்கலாம். நாளடைவில் கோவில் மட்டம் உயரும் போது கீழ் உள்ள மண்டபம் மண்ணால் மூடப்பட்டிருக்கலாம் என்பதே உண்மை என தெரிவித்துள்ளார்.