10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் நாணயம் - உங்க கிட்ட இருக்கா இந்த நாணயம்?

Auction Rare One Rupee Coin
By Thahir Sep 21, 2021 07:46 AM GMT
Report

நூற்றாண்டு பழமை மிக்க பொருட்களுக்கு என்றென்றும் மதிப்பு உண்டு. அதிலும் நாணயங்கள் எளிதில் வரலாற்றில் அறிந்துகொள்ள உதவும் பொருள் என்பதால் அரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது.

இதனால் வரலாற்று ஆய்வாளர்கள் தங்களுக்கு தேவையான நாணயங்களை பல லட்சங்கள் கொடுத்தும் வாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.

10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் நாணயம் - உங்க கிட்ட இருக்கா இந்த நாணயம்? | Rare One Rupee Coin Auction

நூற்றாண்டு பழமை மிக்க நாணயங்களை விற்பனை செய்வதற்காகவே சில இணையதளங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது.

ஏலத்தின் முடிவில் 10 கோடி ரூபாய்க்கு இந்த நாணயம் வாங்கப்பட்டது. பழங்கால நாணயம் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவது முதன் முறை அல்ல.

இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில் 1933 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த அமெரிக்க நாணயம் 18.9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.

அதாவது இந்திய மதிப்பில் 138 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பழைய ஐந்து ரூபாய் நோட்டுகள், இரண்டு ரூபாய் நாணயங்கள் வைத்திருப்பவர்கள் பல லட்சம் சம்பாதிக்கலாம் என பல்வேறு விளம்பரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பொதுவாக நூற்றாண்டு பழமை மிக்க நாணயங்கள் தான் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டு வாங்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட நாணயங்களோ ரூபாய் நோட்டுகளோ வாங்கபடுவதில்லை.

எனவே இதுபோன்ற விளம்பரங்களை கண்டு நாணயங்களை விற்பனை செய்ய இணையதளங்களில் பொதுமக்கள் அவசரப்பட்டு பதிவு செய்ய வேண்டாம்.

ஏனெனில் உங்கள் உங்கள் விவரங்களை கொடுத்து நாணய விற்பனையாளராக பதிவு செய்ய சில ஆயிரங்களை செலவழிக்க வேண்டியதாக இருக்கும்.

அதனால் நூற்றாண்டு பழமை மிக்க நாணயங்கள் உள்ளிட்ட பழங்கால அரிய பொருட்கள் வைத்து இருப்பவர்கள் மட்டும் நாணயங்கள் விற்பனை செய்யும் இணையதளங்களில் பெயர் பதிவு செய்வதை குறித்து சிந்தியுங்கள்.