மேடையில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர்

United States of America Death
By Thahir Jun 19, 2023 05:57 AM GMT
Report

மேடையில் பாடிக்கொண்டிருந்த போது பிரபல பாடகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. 

மேடையிர் சரிந்து விழுந்த பாடகர் 

பிரபல ராப் பாடகர் பிக் போகி மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அமெரிக்காவின் ஹுஸ்டன் மாகாணத்தில் ராப் இசை பாடகராக இருந்தவர் பிக் போகி (வயது 45).

Rapper Big Boogie dies

பியூமோன்ட் நகரில் நடந்த கச்சேரி ஒன்றில் மேடையில் ராப் பாடல்களை பாடி கொண்டிருந்த உள்ளார். அப்போது திடீரென மூச்சிறைப்பு ஏற்பட்டது.

இதனால் அவர் மேடையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை சுற்றியிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்த பரிதாபம் 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிக் போகி மரணம் அடைந்ததற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

மில்டன் போவல் என்ற இயற்பெயரை கொண்ட போகியின் மறைவால் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தீவிர ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.