காதலன் கழுத்தில் கத்தி; மாணவியை தூக்கிச் சென்று சீரழித்த கும்பல்!
காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை
காஞ்சிபுரம், விப்பேடு-குண்டுகுளம் எல்லை பகுதியில் கல்லூரி மாணவன் தனது காதலியை தனிமையில் சந்தித்துள்ளார். அங்கு காலி வீட்டுமனை பகுதியில் இருவரும் பேசி கொண்டிருந்துள்ளனர். அப்போது, அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த மர்ம கும்பல் இவர்களை பார்த்துள்ளனர்.
போதையில், காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, அப்பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
4 பேர் கைது
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், விமல், சிவக்குமார், தென்னரசு ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.