75 வயது மூதாட்டியை சீரழித்த 25 வயது இளைஞன்!.. சென்னையில் பகீர் சம்பவம்
சென்னையில் 75 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்து கொலை செய்த 25 வயதான இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டை ரோட்டரி நகரில், 75 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார், இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவதினத்தன்று தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார், இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
பிரேதபரிசோதனையில், குறித்த மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது, இதனையடுத்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வசந்தகுமார் என்பவர் அந்த வீட்டுக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து வசந்தகுமாரிடம் விசாரணை நடத்தியதில், கஞ்சா போதையில் சம்பவத்தன்று ரோட்டரி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த வசந்தகுமார், கதவு திறந்து கிடந்ததால் மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.
வீட்டில் முகத்தை மூடியபடி அசந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை இளம் பெண் என நினைத்து வன்கொடுமை செய்ததாகவும், மூதாட்டி வெளியில் காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக தரையில் தலையை அடித்து கொலை செய்து விட்டு நகைக்காக நடந்த கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதையடுத்து கஞ்சா காமுகன் வசந்தகுமாரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.