“பயலுக கடிச்சத ,பாம்பு கடிச்சிதுன்னு சொல்லி..” - சகோதரிகளை சின்னாபின்னமாக்கிய கொடூரர்கள்!
நாலு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட சகோதரிகளை, பாம்பு கடிதத்தாக கூறி மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது மற்றும் 16 வயதான இரண்டு மைனர் சகோதரிகள் கூலி வேலை செய்யும் தாயுடன் வசித்து வந்தனர்.அந்த பெண்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் புலம் பெயர்ந்த
தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர் .அதில் 22 முதல் 25 வயதிற்குள் இருக்கும் நான்கு வாலிபர்களுக்கு அந்த சகோதரிகளின் மீது ஆசை பிறந்துள்ளது .அதனால் அந்த சகோதரிகளை அடைய அவர்கள் திட்டம் தீட்டினர் .
அதன் படி கடந்த வாரம் அந்த சகோதரிகள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ,அந்த நால்வரும் அங்கு சென்றனர். பிறகு அந்த நாலுபேரும் அந்த சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர் அதன் பிறகு
இந்த விஷயம் வெளியே தெரிந்து விடுமோ என்று அவர்கள் பயந்தனர் .அதனால் அந்த பெண்களை அடித்து துன்புறுத்தி அந்த தோட்டத்திலிருந்த பூச்சி கொல்லி மருந்தை குடிக்க வைத்தனர் ,அதன் பிறகு அந்த சிறுமிகளை
ஆபத்தான நிலையில் டெல்லியில் உள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் பாம்பு கடித்து விட்டதாக கூறி சேர்த்தனர் .ஆனால் டாக்டர் அந்த பெண்களை செக்கப் செய்த போது அவர்கள் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்துள்ளதை
கண்டுபிடித்தனர் .அதன் பிறகு அதில் ஒரு பெண் இறந்து விட்டார் .பின்னர் போலீஸ் வரவைக்கப்பட்டு அந்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன .இப்போது விசாரணை நடைபெற்று நான்கு பேரும் செவ்வாய்க்கிழமை
கைது செய்யப்பட்டனர் .