பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பலாத்காரம் : மாணவியை கர்ப்பமாகிய பள்ளி உரிமையாளர் போக்சோவில் கைது

Sexual harassment
By Irumporai Oct 10, 2022 05:30 AM GMT
Report

9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய நர்சரி உரிமையாளரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

 ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர் (50). இவரது வீட்டின் அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார்.இந்த நிலையில், மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில், சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பலாத்காரம் : மாணவியை கர்ப்பமாகிய பள்ளி உரிமையாளர் போக்சோவில் கைது | Rape Every Time School Owner Student Pregnancy

அவ்வாறு அடிக்கடி அந்த மாணவியை அழைத்துச் செல்லும்போது, சேகருக்கு மாணவி மீது ஆசை வந்துள்ளது. இதையடுத்து, மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

9 வகுப்பு மாணவி கர்ப்பம்

கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏறபட்டுள்ள நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர், மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதனை சற்றும் எதிர்பராத பெற்றோர் அதிர்ச்சியடைந்து, ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குற்றவாளி போக்சோவில் கைது

விசாரணையில், மாணவிக்கு சேகர் கடந்த இரண்டு வருடங்களாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதும் இதுகுறித்து வெளியில் எதுவும் சொல்லக்கூடாது என்றும் சேகர் மிரட்டியதால், மாணவியும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பலாத்காரம் : மாணவியை கர்ப்பமாகிய பள்ளி உரிமையாளர் போக்சோவில் கைது | Rape Every Time School Owner Student Pregnancy

இந்நிலையில், சேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி பள்ளியின் உரிமையாளரே மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.