தங்கையை கர்ப்பமாக்கிய காமக்கொடூர அண்ணன் உட்பட 2 பேர் கைது - நிலைகுலைந்த பெற்றோர்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாயை இழந்த காரணத்தினால், பெரியம்மாவின் பராமரிப்பில் இருந்து வந்திருக்கிறார்.
இதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கி முட்டத்தூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இதனையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்தில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென கடந்த 2 தினங்களுக்கு முன்பு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சிறுமியை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் இதுகுறித்து உறவினர்கள் விசாரணை நடத்தினர். அப்போது? சிறுமியை பெரியம்மா மகன் மோகன், அதே கிராமத்தைச் சேர்ந்த முதியவர் வெங்கடேசன், ராஜமணி என்பவரின் மகன் இளையராஜா ஆகியோர் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.