சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய நடிகர் ரன்வீர் - வைரலாகும் வீடியோ - குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் ரன்வீர் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
நடிகர் ரன்வீர் சிங்
2010ம் ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகர் ரன்வீர் சிங். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி கொடுத்ததால் முன்னணி நடிகராக உயர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தனது அந்தஸ்தை உயர்த்தினார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையான தீபிகா படுகோனை திருமணம் செய்து கொண்டார் ரன்வீர் சிங். இவர் அணியும் ஆடையும், ஸ்டைலும், தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய நடிகர் ரன்வீர்
இந்நிலையிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், படப்பிடிப்பின்போது ரன்வீர்சிங்கை பார்க்க கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் சிக்கிக்கொண்டு மூச்சு விடாமல் சிக்கி கதறி அழுதார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட ரன்வீர் சிங் உடனடியாக ஓடி, கூட்டத்தின் நடுவே சிக்கி இருந்த அச்சிறுவனை காப்பாற்றி, தன் தோளில் தூக்கிக்கொண்டு வந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்... என்று மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.