தீபிகா படுகோனேவுடனான முதலிரவு; கேரவனில் வைத்தே.. - ரன்வீர் சிங் ஓபன் டாக்
தீபிகா படுகோனேவுடனான முதலிரவு குறித்து ரன்வீர் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தீபிகா படுகோனே
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் முன்னதாக ரன்பீர் கபீரை காதலித்து வந்தார். ஆனால் இவர்களுடனான உறவில் விரிசலில் ஏற்பட்டு ரன்பீர் கபீர் பிரேக்அப் செய்தார்.
இதன் பிறகு ரன்வீர் சிங்கிற்கும் தீபிகா படுகோனேவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
முதலிரவு
இந்நிலையில், கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண் 7' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவுடனான தனது முதலிரவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதில் கரண் ஜோகர் ரன்வீர் சிங்கை பிங்கோ விளையாடச் சொன்னார். இதில் முதலிரவின் போது சோர்வாக இருந்தீர்களா என்று கரண் கேட்டபோது, ரன்வீர் இல்லை என்றும், தீபிகாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும் அன்பான உறவு மற்றும் முரட்டுத்தனமான உறவு ஆகியவற்றிற்கான பாடல்கள் கொண்ட தனி தனி பிளேலிஸ்ட் வைத்திருப்பதாக கூறினார். மேலும் கேரவனில் வைத்து கூட தீபிகாவுடன் நெருக்கமாக இருந்துள்ளதாகவும் அதில் இருந்த ரிஸ்க் உற்சாகத்தை ஏற்படுத்தியது என வெளிப்படையாக பேசினார் ரன்வீர் சிங்.