தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் விவாகரத்து? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Marriage Deepika Padukone Ranveer Singh Divorce
By Sumathi 2 மாதங்கள் முன்

ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ரன்வீர் - தீபிகா

பாலிவுட்டில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மும்பையில், ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், இருவரும் தங்களது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் விவாகரத்து? அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Ranveer Singh And Deepika Padukone Divorce Rumour

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரன்வீர் சிங்கும், தீபிகாவும் மனம் ஒத்து வாழவில்லை என்றும், இருவருக்கும் இடையே உறவில் இடைவெளி இருப்பதாகவும், விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்கள் என்றும் பாலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகிறது.

விவாகரத்து? 

இதற்கிடையில் தீபிகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக எல்லா இடங்களிலும் செய்தி பரவியது. அதற்கு முன்பும் பிராஜெட் கே படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் விவாகரத்து? அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Ranveer Singh And Deepika Padukone Divorce Rumour

மேலும், அதிக அளவில் பின்தொடர்பவர்களை கொண்ட உமைர் சந்துவின் (Umair Sandhu) ட்வீட் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. தற்போது பிரபாஸுடன் இணைந்து பிராஜெட் கே படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் ஷாருக்கானுடன் பதான், ஜவான் போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.