கணவர் முன்பு ஐஸ்வர்யா ராய்க்கு முத்தம் கொடுத்த ரன்வீர் சிங் - உடனே கடுப்பான அபிஷேக் பச்சன்... - வைரல் வீடியோ..!

Aishwarya Rai Ranveer Singh
By Nandhini Dec 19, 2022 05:19 PM GMT
Report

ஐஸ்வர்யா ராய் -

அபிஷேக் பச்சன் பிரபல உலக அழகியாகவும், சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் 1994 ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய், இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அபிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

கால்பந்து போட்டியை கண்டுகளித்த ரன்வீர் - தீபிகா

இந்நிலையில், நேற்று கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிரான்ஸ் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதிக் கொண்டனர். இந்த போட்டியை காண ரன்வீர் சிங் தன் மனைவி தீபிகாவுடன் கத்தாருக்கு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ranveer-singh-aishwarya-rai-abhishek-bachchan

ஐஸ்வர்யா ராய்க்கு முத்தம் கொடுத்த ரன்வீர் சிங்

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா மற்றும் அபிஷேக் பச்சனுடம் கத்தாருக்கு உலக கோப்பை கால்பந்து போட்டி காண சென்றுள்ளனர்.

அப்போது, இவர்களை சந்தித்த ரன்வீர் சிங், ஐஸ்வர்யா ராய்யின் கையைப் பிடித்து கையில் முத்தம் கொடுத்தார். ஆனால், பக்கத்தில் இருந்த அபிஷேக் பச்சன் முகம் கடுகடுவென மாறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.