விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் புகார்
தவெக-வில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து மிரட்டல்களை சந்தித்து வருவதாக ரஞ்சனா நாச்சியார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தவெக-விலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார்
கடந்த மார்ச் 8ம் திகதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், தன்னை சுற்றி நடைபெறும் விவகாரங்கள் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், நீங்கள் கவலைப்படும் அளவுக்கு வொர்த் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சனா நாச்சியார் தவெகவிலிருந்து விலகி கடந்த மார்ச் 19ம் திகதி திமுக-வில் இணைந்தார்.

விஜய் மீது புகார்
இந்நிலையில், தவெக-விலிருந்து விலகிய பிறகு தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை ரஞ்சனா நாச்சியார் அளித்துள்ளார்.
மேலும் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சனா நாச்சியார், தான் தவெகவிலிருந்து விலகி பிறகு சமூக ஊடகங்களில் தன்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும், ஆபாச வார்த்தைகள் மற்றும் என்னுடைய புகைப்படங்களை மாஃப் செய்து வெளியிடுவது ஆகியவற்றை தவெக தலைவர் விஜய்யால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட விர்ச்சுவல் வாரியஸ் படை செய்து வருவதாக தெரிவித்தார்.
இந்த விர்ச்சுவல் வாரியஸ் கூட்டத்தை வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனம் மூலம் ஆதவ் அர்ஜுனா நடத்தி வருவதாகவும், அவர்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் விஜய் புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறு பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய அவதூறுகள் மற்றும் ஆபாச வார்த்தைகளை பேசுபவர்களை கண்டிக்க வேண்டிய கடமை விஜய்க்கு உண்டு, எனவே இதற்கு அவர் பொறுப்பேற்று இந்த சம்பவத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் வீடியோவாகவோ அல்லது ஆடியோவாகவோ அல்லது கடிதம் ஒன்றையோ வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.