‘ரஞ்சிதமே...’ விஜய் பாடலுக்கு கடும் எதிர்ப்பு...! - ஷாக்கான ரசிகர்கள்
சமீபத்தில் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வாரிசு படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.
இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அவருடைய முந்தைய பட பாடல்களின் சாதனைகளை எப்படியும் லேட்டஸ்ட்டாக வெளியாகும் பாடல்கள் முறியடித்துவிடும்.
ஆனால், சமீபத்தில் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் முந்தைய சாதனைகளை முறியடிக்கவில்லை. 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இதற்கு முன் வெளியான 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் பார்வைகளையும், 2.2 மில்லியன் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்தது. அந்த சாதனையை 'ரஞ்சிதமே' பாடல் முறியடிக்கவில்லை.
‘ரஞ்சிதமே’ பாடலுக்கு எதிர்ப்பு
இந்நிலையில், ‘ரஞ்சிதமே’ பாடலில் இடம் பெற்ற, ‘உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே...’ என்ற வரிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாடலின் உண்மையான அர்த்தம் புரியாமலேயே, பல சிறுவர்கள் இப்பாடலை பாடிக் கொண்டு வருகிறார்கள்.
விஜய் போன்ற பிரபல நடிகர்கள், சமூக பொறுப்பை கடைப்பிடிக்க வேண்டும் என்று பலர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.