எல்லாருமே வெறும் அறிக்கை தான்..வேற ஒண்ணும் இல்ல..! பட்டென சொன்ன ரஞ்சித்..!
விஜய் சமூக பணிகளை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் தனது கருத்தை தேய்வித்துள்ளார்.
ரஞ்சித் பேட்டி
நடிகர் விஜயகாந்த் மறைந்ததை அடுத்து தொடர்ந்து பலரும் அவருக்கு பொதுமக்கள் உட்பட்ட பலரும் தொடர்ந்து தங்களது அஞ்சலியை செலுத்து வருகின்றனர். ஆனால், நடிகர் வடிவேலு விஜயகாந்த் குறித்து தற்போதும் மவுனம் காப்பது பெரும் விமர்சனத்தை பெற்று வருகின்றது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித்திடம் வடிவேலு வராததை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தனிப்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வடிவேலு வராமல் இருந்திருக்கலாம் ஆனால், தன்னை பொறுத்தவரையில் வெறும் அறிக்கையாவது வடிவேலு தந்திருக்கலாம் என்று கூறினார் ரஞ்சித்.
வெறும் அறிக்கை..
தொடர்ந்து அவரிடம் விஜயின் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி, ஆனால் யாருமே இது வரை ஒன்றுமே செய்யவிலை என்று சுட்டிக்காட்டி எல்லாமே வெறும் அறிக்கை தான் விமர்சனம் செய்தார்.
இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் அனைவர்க்கும் அரசியல் தெரியவேண்டும் என குறிப்பிட்டு, படித்த இளைஞர்கள் படித்து வேலையில்லாமல் இருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டினார். விஜய் அரசியலுக்காக இந்த பணிகளை செய்கிறார் என்றால் நிச்சயமாக அரசியலுக்கு வரட்டும் என்று கூறினார்.