அறிவில்ல உனக்கு...ஏன் கால்'ல விழற...கொந்தளித்த பா.ரஞ்சித்
நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது அது குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
உபி முதல்வருடன் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இமயமலை பயணத்தை முடித்தவுடன்பல அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து வருகிறார். ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில துணை தலைவர், ,மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தை சந்தித்த போது, ரஜினி அவரின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வர் என்பதை தாண்டி, அவர் நாதசைவ சம்பிரதாயத்தை பின்பற்றும் கோரக்நாத் மடத்தின் பீடாதிபதி என்பதால் ரஜினி அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார் என கூறப்படுகிறது.
வைரலாகும் ரஞ்சித் வீடியோ

இந்நிலையில் தான் கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தின் பழைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், “ஏன் கால்ல விழுற, அறிவில்ல உனக்கு. இன்னொருத்தன் கால்ல விழுறது எவ்வளவு பெரிய அடிமைத்தனம். அந்த அடிமைத்தனத்தை நீ ஏன் தொடர்ந்து செஞ்சிட்டு இருக்க. உன் அப்பா, அம்மா காலை தவிர வேற எவன் கால்லயும் விழாத நீ” என பா.ரஞ்சித் ஆவேசத்துடன் பேசியிருப்பார்.
Vera vazhi Therila tag panida vendiyathu thaan @rajinikanth pic.twitter.com/OSOgYuAupw
— CSK (@CSK_myspace) August 19, 2023
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil