ரஜினியால் பாஜக வளரவில்லை- நடிகர் ராதாரவி
ரஜினியால் பாஜகா வளர்ச்சியடையவில்லை என பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி தெரிவித்துள்ளார் நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி, ரஜினியால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடையவில்லை, தானாகவே வளர்ச்சியடைந்தது எனக் கூறினார்.
மேலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பிரச்னை இல்லாத கட்சி, நல்ல கட்சி என்பதால் நடிகர்கள் பலரும் பாஜகவில் இணைவதாக கூறினார்.
அதேசமயம்,அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இருக்குமா இல்லையா என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அவர் கூறினார்.