விஜய்யை கடுமையாக விமர்சித்த ரஞ்சனா நாச்சியார்! திமுகவில் இணைந்தார்

DMK
By Fathima Mar 19, 2026 06:43 AM GMT
Report

தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்த துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்து  கொண்டார்.

பாஜகவின்  கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார் மும்மொழிகொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் தவெக வில் இணைந்தார்.

கட்சி பணிகளை ஆற்றி வந்த ரஞ்சனா நாச்சியார் சில வாரங்களுக்கு முன் விஜய் மற்றும் நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்தார்.

விஜய்யை கடுமையாக விமர்சித்த ரஞ்சனா நாச்சியார்! திமுகவில் இணைந்தார் | Ranjana Nachiyar Joins In Dmk

விவாகரத்து தொடர்பாக விஜய் பேசும் போது, அது வொர்த் இல்லை என கூறியதை கண்டித்த ரஞ்சனா நாச்சியார், நிர்வாகிகள் குறித்தும் கடுமையான பேசியிருந்தார்.

தொலைக்காட்சி பேட்டிகளிலும் தவெகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுகவில் இணைந்தார். 

”திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்வதில் பெருமை என்றும்,  பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யை கடுமையாக விமர்சித்த ரஞ்சனா நாச்சியார்! திமுகவில் இணைந்தார் | Ranjana Nachiyar Joins In Dmk