என் ஃபிரன்ஸ் சொன்னாங்க..அதனால்தான்; திருமணத்தில் ஓட்டம் பிடித்த மணப்பெண் - கதறிய மாப்பிள்ளை!
திருமணத்தை நிறுத்தி பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண ஏற்பாடு
ராணிப்பேட்டை, நெமிலி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த இளம் பெண் ஒருவருக்கும், அவரின் உறவினர் மகனுக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை, கட்டிட மேஸ்திரியாக வேலைபார்க்கிறார். அங்குள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்கிடையில், கடைக்குச் சென்று வருகிறேன் என்று கூறிச் சென்ற பெண், வீடு திரும்பவே இல்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
மாயமான மணப்பெண்
அதேசமயம் மணப்பெண் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். தொடர்ந்த விசராணையில், தோழிகள் மாப்பிள்ளை சரியில்லை என்று கூறினர். அதனால் எனக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
அதன்பின், குடும்பத்தினரை அழைத்துப் பேசியும் பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பெற்றோர் பார்க்கும் வேறொரு மாப்பிள்ளையை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்கிறேன் எனத் தெரிவித்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.