தமிழக முதலமைச்சருக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி

M K Stalin Ranil Wickremesinghe
By Thahir May 22, 2022 05:05 PM GMT
Report

தமிழகம் சார்பில் கப்பலில் அனுப்பப்பட்ட பால் பவுடர், அரிசி, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை சென்றடைந்தது.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உள்பட 2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்து சேர்ந்தது.

இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.