இலங்கையின் அடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே?
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இலங்கை அதிபர் கோட்ட ராஜபக்சேவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவினை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பிரிவினர் மற்றும் ஏனைய சில கட்சிகள் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த நிலையில், அவர் விரைவில் பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் நெருக்கடி நிலை குறித்து விவாதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ரணில் விக்கிரமசிங்க தற்போது புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக லங்கா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வெளியாகியுள்ள செய்திகளின்படி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவானோர் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது , இலங்கையில் தற்போது நிலவும் சவாலான நிலையில் ரணில் விக்கிரமசிங்கே எவ்வாறு சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.