‘ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும்: இதற்கு முந்தைய நிர்வாகமே காரணம்’ - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

Ranil Wickremesinghe Sri Lanka
By Swetha Subash May 20, 2022 06:33 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கை பொருளாதார நெருக்கடியால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து அந்நாட்டு மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது. அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

‘ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும்: இதற்கு முந்தைய நிர்வாகமே காரணம்’ - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே | Ranil Wickremesinghe Insufficiency Of Food August

இந்த களேபரங்களுக்கிடையே இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதவியேற்றுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் கடந்த மூன்று மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய எரிபொருள் இறக்குமதி செய்யமுடியாமல் இலங்கையில் உள்ள துறைமுகங்களில் கப்பல்கள் காத்திருக்கின்றன. எரிபொருளை இறக்குமதி செய்ய போதுமான டாலர்கள் இல்லாததால் எரிபொருள் தட்டுப்பாடு அதிகமாக காணப்படுகிறது.

கடந்த வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு எரிபொருளானது அனுப்பி வைக்கப்பட்டது.

இருப்பினும் வடக்கு மாகாண பகுதிகளான யாழ்ப்பாணம் பகுதியில் எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இலங்கையில் வரும் ஜுன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

‘ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும்: இதற்கு முந்தைய நிர்வாகமே காரணம்’ - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே | Ranil Wickremesinghe Insufficiency Of Food August

இது ஒருபுறம் இருக்க இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கான உரம் எதுவும் இல்லை. இதனால் நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது.

எனவே வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் இப்போது உணவு நெருக்கடி நிலவுகிறது. நாட்டின் இப்போதைய நெருக்கடிக்கு முந்தைய நிர்வாகமே காரணம் ஆகும்.

நாங்கள் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டோம். இலங்கையில் ஒரு போதும் இது போன்ற நிலை இருந்தது இல்லை. எங்களிடம் டாலர் இல்லை. ரூபாயும் இல்லை. நாங்கள் நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது.” என தெரிவித்தார்.