இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே..!

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Government
By Thahir Jul 21, 2022 04:48 AM GMT
Report

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார் ரணில்

நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் தொடங்கிய வாக்குப்பதிவில் 223 வாக்குகள் பதிவாகியது.

இதையடுத்து 219 வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் 134 வாக்குள் பெற்று ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கேவை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகபெருமா 82 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே..! | Ranil Was Sworn In As The President

இந்த நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று அதிபராக இன்று நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.