கோட்டாபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம், விக்ரமசிங்கே ஆதரவு - இலங்கை அரசியலில் பரபரப்பு!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Swetha Subash May 15, 2022 12:17 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்துவந்த இந்த போராட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு வன்முறை மூண்டதால் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த கலவரத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்தார்.

கோட்டாபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம், விக்ரமசிங்கே ஆதரவு - இலங்கை அரசியலில் பரபரப்பு! | Ranil Supports Protestors To Throw Out Gotabaya

பேச்சுவார்த்தை முடிவில் 73 வயதான முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் பதவியை ஒப்படைத்தார். அவரும் நாட்டின் 26-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

அவர் தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார். இந்நிலையில், இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சர்கள் 4 பேர் இன்று பதவியேற்றனர்.

ஜி.எல்.பெரீஸ், தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சனா விஜயசேகர ஆகியோருக்கு அதிபர் ரனில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகளும், மக்களும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்தபோவதாகவும் அறிவித்துள்ளனர்.

கோட்டாபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம், விக்ரமசிங்கே ஆதரவு - இலங்கை அரசியலில் பரபரப்பு! | Ranil Supports Protestors To Throw Out Gotabaya

போராடும் மக்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ச பதவி விலகும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளனர். இந்நிலையில் மக்கள் போராட்டத்திற்கு புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘கோ பேக் கோட்டா’ என்ற போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான் இலங்கை அரசியல் அமைப்பில் புதிய மாற்றம் ஏற்படும். மேலும் இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கான பொறுப்பும் அவர்களுக்கு உண்டாகும்.” என கூறினார்.

அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரனில் விக்ரமசிங்கே ஆதரவு கொடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.