இலங்கைக்கு இந்தியா ஆதரவு - நிர்மலா சீதாராமனுக்கு ரணில் பாராட்டு..!

Ranil Wickremesinghe
By Thahir May 27, 2022 08:38 PM GMT
Report

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மேலாளர் கிரிசலினா ஜோர்ஜீவாவுடனான சந்திப்பின்போது,

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஐஎம்எப், நிதி உதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இலங்கைக்கு இந்தியா ஆதரவு  -  நிர்மலா சீதாராமனுக்கு ரணில் பாராட்டு..! | Ranil Praises Nirmala Sitharaman

இந்நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு பாராட்டு தெரிவித்ததாகவும்,

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.