இலங்கையின் நிதி அமைச்சராக புதிய பொறுப்பை ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்க

By Irumporai May 25, 2022 07:50 AM GMT
Report

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தனா்.

அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தாா். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா்.

அதன்பின், பல்வேறு துறைகளுக்கு மந்திரிகளை அதிபா் கோத்தபய ராஜபக்சே நியமித்து வருகிறாா். இந்த நிலையில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையின் நிதி அமைச்சராக புதிய பொறுப்பை ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்க | Ranil Becomes Finance Minister

ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்தீரனத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகளுக்கான அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதுவரையில், 20 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே பிரதமர் ரணில் இதுவரை நிதி அமைச்சராக பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.