வேலு நாச்சியாரின் தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் : பிரதமர் மோடி

BJP Narendra Modi
By Irumporai Jan 03, 2023 08:38 AM GMT
Report

வீர மங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது,ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய முதல் வீரப்பெண்மணி ஆவார்.

 வேலுநாச்சியார்

தென் இந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்படுபவர். இவர் மகாராணியாக 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட பெருமைக்குரியவர். இவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்தநாளில் அவரை புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்வீட்டரில், 

வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார்.

வேலு நாச்சியாரின் தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் : பிரதமர் மோடி | Rani Velu Nachiyars Feat Generations Pm Modi

காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் இவ்வாறு பிரதமர் தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்