''மவுனம் காக்கும் ரங்கசாமி தூது விடும் திமுக'' கோபத்தில் பாஜக, சூடு பறக்கும் புதுவை தேர்தல்

bjp puducherry rangaswamy
By Jon Mar 05, 2021 01:02 PM GMT
Report

ரங்கசாமி யாருக்கு ஆதரவு கொடுக்க போகின்றார் என்ற குழப்பம் புதுச்சேரி அரசியலில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் என்.ஆர் காங்கிரஸ் பாஜகவுடன் தான் இருப்பதாக பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியும், பாஜக அணியில் அதிமுக, பாமக ஆகியவையும் உள்ளன.

இதில், ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரவு யாருக்கு என்பதில் தான் குழப்பம் எழுந்துள்ளது. ஆனால் ரங்கசாமியோ வழக்கம் போல தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் மவுனமாக உள்ளார். பாஜக தரப்பில் முக்கிய தலைவர்கள் ரங்கசாமியை சந்தித்தும் மவுனம் தொடர்கிறது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான நாஜிம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கட்சிகளின் அணிக்கு தலைமை வகிக்க ரங்கசாமி முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனால் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த பலர் குழப்பத்துக்கு ஆளாக்கியுள்ளனர். மாநில நலன் கருதி அனைத்து மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். புதுச்சேரியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். அந்த அரசுக்கு ரங்கசாமி தலைமை தாங்க வேண்டும். இதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்தபோது நல்ல கருத்து என பாராட்டினார்.

ரங்கசாமி தலைமையை ஏற்க நாங்கள் தயார். என கூறியதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் மக்களைக் குழப்பும் வேலையில் காங்கிரஸ் - திமுக இறங்கியுள்ளதாக கூறினார். மக்கள் நலன் கருதி ரங்கசாமி எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பார். திமுக வின்தற்போதைய கருத்தினை திமுக தலைவர் ஸ்டாலின் கூறட்டும் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

ரங்கசாமி ஆதரவு கூட்டணிக்கா, அல்லது தனித்து போட்டியிட போகின்றாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்கின்றனர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர். மவுனம் கலைப்பாரா ரங்கசாமி பொறுத்திருந்து பார்ப்போம்..