புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உரிமை கோரியுள்ளார்.
பாஜகவின் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரங்கசாமி முடிவு செய்கின்ற தேதியில் பதவியேற்பு விழா நடைபெறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்கள் கிடைத்துள்ளன. அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல்வர் பாஜக கேட்பதால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடிப்பதாகச் செய்தி வெளியாகியிருந்தன. தன்னுடைய தலைமையில் தான் ஆட்சி அமையும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரங்கசாமிக்கு வெற்றி பெற்ற ஆறு சுயேட்சை வேட்பாளர்களில் ஐந்து பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.