“புலி உறுமுது புலி உறுமுது..நிக்காம ஓடு ஓடு” - பிரபலம் வெளியிட்ட திகிலூட்டும் வீடியோ பதிவு
பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா, புலி ஒன்று காட்டு எருமையை விரட்டும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
எப்பொழுதும் பிரபலங்கள் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்று கூடுதல் கவனம் பெறும்.
அவர்கள் செய்யும் குறும்பு தனமான வீடியோக்கள், அவர்கள் வெளியிடும் சுவாரஸ்யமான வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் அது வேகமாக பரவி வைரலாகிறது.
அந்த வகையில், பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , புலி ஒன்று காட்டு எருமையை விரட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பார்ப்பதற்கு மிகவும் பயங்கர காட்சியாக இருக்கும் அந்த வீடியோவுக்கு, ‘என்னுடைய முதல் புலி வேட்டை' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.