என் பொண்டாட்டியோட ஒரே பெட்டில் படுப்பது ரொம்பவே கஷ்டம் - ரன்பீர் கபூர்

Alia Bhatt Ranbir Kapoor
By Nandhini Sep 27, 2022 02:40 PM GMT
Report

என் பொண்டாட்டியோட ஒரே பெட்டில் படுப்பது ரொம்பவே கஷ்டம் என்று பேட்டி ஒன்றில் நடிகர் ரன்பீர் கபூர் ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

ரன்பீர் கபூர் - ஆலியாபட்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். ஆலியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

ரன்பீர் கபூர் பேட்டி

இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு இருவரும் பேட்டி கொடுத்தனர். அப்போது ஆலியாவிடம் நீங்கள் சகித்துக்கொள்ளும் விஷயம் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், ஆலியா தூங்க ஆரம்பித்தால் நேராகவே படுக்க மாட்டார். தலை ஒரு பக்கம், கால்கள் ஒரு பக்கம் இருக்கும். இதனால், நான் ஒரு ஓரமாக வந்துவிடுவேன். அவருடன் தூங்குவதுதான் கொஞ்சம் கஷ்டம் என்றார்.

ரன்பீர் கபூரிடம் கேட்ட அதே கேள்வி ஆலியாவிடமும் கேட்கப்பட்டது. அப்போது அவர் ஆலியா பட் கூறுகையில், ரன்பீரிடம் பிடித்ததே அவரின் அமைதி தான். என்ன சொன்னாலும் பொறுமையாக கேட்பார்.

ஆனால் அவரின் அமைதி தான் நான் சகித்துக்கொள்ளும் விஷயமும் கூட. சில சமயங்களில் அவர் ஏதாவது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் ரன்பீர் அப்பொழுதும் அமைதியாகவே இருப்பார் என்றார்.

ranbir-kapoor-alia-bhatt