எங்க விட்டாலும் த்ரிஷா வீட்டுக்கு தான் போவேன் - முன்னாள் காதலன் சொன்னதை பாருங்க..

Trisha Viral Video Rana Daggubati
By Sumathi Mar 23, 2024 07:43 AM GMT
Report

த்ரிஷா குறித்து ராணா பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

த்ரிஷா 

தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார்.

rana - trisha

திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வருண் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் வரை அந்த உறவு நீடிக்கவில்லை.

த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கு காரணமே அவங்கதான் - உண்மை உடைத்த பிரபலம்!

த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கு காரணமே அவங்கதான் - உண்மை உடைத்த பிரபலம்!

ராணா பேச்சு

தொடர்ந்து, தெலுங்கில் நடித்தபோது ராணா டகுபதியை காதலித்ததாக கூறப்பட்டது. அந்த காதலும் பாதியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் த்ரிஷா குறித்து ராணா டகுபதி பேசிய பழைய வீடியோ ஒன்று திடீரென்று வைரலாகியுள்ளது.

எங்க விட்டாலும் த்ரிஷா வீட்டுக்கு தான் போவேன் - முன்னாள் காதலன் சொன்னதை பாருங்க.. | Rana Dagupathi About Trisha Video Viral

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டிருந்த அவரிடம், சென்னையில் உங்களுக்கு தெரியாத ஏரியாவில் உங்களை விட்டுவிட்டால் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிடுவீர்களா என்று கேட்டதற்கு, கண்டிப்பாக போய்விடுவேன். சென்னையில் என்னை எங்கு விட்டாலும் திரிஷாவின் வீட்டுக்குத்தான் போவேன் எனத் தெரிவித்துள்ளார்.