தன் அலுவலகத்தில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் சிலை வைத்த ராணா - வைரலாகும் நெகிழ்ச்சி டுவிட்
பிரபல நடிகர் ராணா டகுபதி, தன் அலுவலகத்தில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் சிலை வைத்து நெகிழ்ச்சி டுவிட் செய்துள்ளார்.
நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு
கன்னட திரையுலகில் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் நடிகர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி பெங்களூருவில் தன் இல்லத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட புனித் ராஜ்குமார் மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
1800 மாணவ மாணவிகளை படிக்க வைத்தது மட்டுமல்லாமல் முதியோர் இல்லங்கள் என்று சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் புனீத் ராஜ்குமார் சிலை
இந்நிலையில், நடிகர் ராணா டகுபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், தன் அலுவலகத்தில் உள்ள, மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் மார்பளவு சிலை ஒன்றை வெளியிட்டு, அந்த பதிவில், மிக அழகான நினைவு இன்று என் அலுவலகத்தில் வந்தது. மிஸ் யூ என் நண்பரே என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The most beautiful memory came into my office today. Miss you my friend. #PuneethRajkumar pic.twitter.com/V8UghfeuX3
— Rana Daggubati (@RanaDaggubati) October 3, 2022