காதல் to லிவின்....வீட்டை எதிர்த்து திருமணம்...நடிகை ரம்யா கிருஷ்ணனின் காதல் கதை..!

Ramya Krishnan Tamil Actress
By Karthick Sep 07, 2023 02:00 PM GMT
Report

ராஜமாதாவாக இன்றும் திரையுலகில் முக்கிய நடிகையாக வளம் வரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் காதல் கதையை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

ரம்யா கிருஷ்ணன்

80-களின் பிற்பகுதியில் தனது சினிமா வாழ்வை துவங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன், இன்றும் பிஸியான நடிகை தான். தமிழ்.தெலுங்கு,மலையாளம்,கன்னடம், ஹிந்தி மொழி படங்களின் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து கதாநாயகியாக மட்டுமில்லாமல் சிறந்த நடிகையாகவும் தன்னை இந்திய திரைத்துறையில் நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.

ramyakrishnan-krishnavamsi-love-story

அதற்கு சிறந்த சான்று பாகுபலி படம். ரஜினி நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த ஜெயிலர் படம் இறுதியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். 2003-ஆம் ஆண்டு திருமண செய்து கொண்ட ரம்யாகிருஷ்ணனின் காதல் வாழ்க்கை குறித்து பலரும் அறிந்திருக்க முடியாது.

காதல் to லிவின்

சந்திரலேகா என்ற படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி என்பவருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் காதல் மலர, இருவரும் அப்போதே ஒன்றாக வசித்து வந்ததாக செய்திகள் வெளிவந்தன.

ramyakrishnan-krishnavamsi-love-story

அப்போது தான், நடிகை ரம்யா கிருஷ்ணனின் இந்த காதல் விவகாரம் வீட்டிலும் தெரிந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு அவசர அவசரமாக வேறொரு மாப்பிளையுடன் திருமணம் முடிவு செய்ய உடனடியாக நடிகை ரம்யாகிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ணவம்சியை கடந்த 2003-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருமண செய்துகொண்டுள்ளார். 20 ஆண்டுகள் ஆகியும் தற்போது இணைபிரியாமல் வாழ்த்து வரும் இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார்.