அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டா இப்படித்தான் செய்யணும் - ரம்யா நம்பீசன் பளீச்!
அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை ரம்யா நம்பீசன் ஐடியா கொடுத்துள்ளார்.
ரம்யா நம்பீசன்
ரம்யா நம்பீசன் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் லீடு ரோல்களில் நடித்துக்கொண்டிருந்தார். தமிழில் ஒருநாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் நடித்திருந்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
பாண்டியநாடு படத்தில் இடம்பெற்ற ஃபை ஃபை பாடலின் மூலம் பாடகியாக பிரபலமடைந்து இன்னும் சில பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில், "சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் அப்படி நடக்கும்போது அதை தைரியமாக எதிர்கொண்டு பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறு அழைப்பவர்களிடம் நடிகைகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையில் இருந்துகொண்டு அதை மறுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.