முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியது ராம்ராஜ் நிறுவனம்
Stalin
Corona relief funf
Ramraj cotton
By mohanelango
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை செலுத்தினர். அந்த வரிசையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனமும் முதல்வர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 1 கோடி ரூபாய்க்காக காசோலையை வழங்கினார்.