பள்ளிகள் ஆசிரியர்களுடன் இளைஞர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் : ராம்நாத் கோவிந்த்
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ராம்நாத்கோவிந்த் உரை
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் கடந்த 2017 ஆம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி, நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் ( ஜூலை 24ம் தேதி) நிறைவு பெறுகிறது.
I will especially cherish the occasions when I had an opportunity to meet our brave jawans of the armed forces, para-military forces and the police. Their patriotic zeal is as amazing, as it is inspiring: President Ram Nath Kovind on the eve of demitting office pic.twitter.com/ADl83pX3dD
— ANI (@ANI) July 24, 2022
நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு நாளை (ஜூலை 25) காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார்.
ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன்
இதனைமுன்னிட்டு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது, இதில் பேசிய ராம்நாத் கோவிந்த்:
சாதரண குடும்பத்தில் பிறந்த எனக்கு நாட்டு மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது.

ஜன நாயக சிறப்பு எனக் கூறிய ராம்நாத் கோவிந்த் நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன் எனக் கூறினார்.
மேலும் , இளைஞர்கள் தங்கள் கிராமம், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர் நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பிற்கு தலை வணங்குவதாக கூறினார்.
மேலும் நாட்டு மக்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக ராம்நாத் கோவிந்த் கூறினார்.