ராமநாதபுரத்தில் செப்.11 முதல் அக்.30 வரை 144 தடை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் அதிகம் கூடும் மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் வார இறுதி நாட்களில் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் அதிகளவு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற இந்த இரு அரசியல் தலைவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செலுத்தும் நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பேரலைக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அம்மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.