ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் கடும் அவதி..!
ramnad
oxygenbed
patients affected
By Anupriyamkumaresan
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியுள்ளதால் புதிய நோயாளிகள் அனுமதிக்க முடியாத சுழல் உருவாகியுள்ளது.
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் உள்ள 220 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியுள்ளதால் புதிதாக வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படுக்கை வசதிகள் இல்லாமலும், மூச்சு விட இயலாமலும் கடும் சிரமத்திற்குள்ளாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.