மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கீழக்கரை அரசு மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திடீர் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த வருகை பதிவேட்டை பார்வையிட்டத்தில் ஒரு சில மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் ஏன் அவர்கள் பணிக்கு வரவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த மருத்துவர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் 2 மருத்துவர்கள் வரவில்லை என கூறியுள்ளார்கள். இதனால் கடும் கோபமடைந்த ஆட்சியர் நானும் தான் தொற்று பாதித்து இருந்தேன், 15 நாட்களில் பணிக்கு திரும்பிவிட்டேன் என்றும் உடனடியாக அவர்களை வர சொல்லியும் உத்தரவிட்டார்.