இலங்கை திரும்ப அகதிகள் வைத்துள்ள கோரிக்கை.... உதவி செய்யுமா மத்திய அரசு?
இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்திற்கு வந்து அகதிகளாக இருக்கும் இலங்கை மக்கள் தங்களை திருப்பி தங்களது தாய் நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக கோரிக்கை வைத்துள்ளனர்.
அகதிகளாக வந்த மக்கள்
இலங்கையில் 2019ம் ஆண்டிலிருந்து கடும் பொருாளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் தனது தாய்நாட்டிலிருந்து பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.
உணவு, எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பற்றக்குறை காணப்பட்டது.
வணிகங்கள், வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அவசர பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நிவாரணம்கோரி அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த 96 குடும்பங்கள் வாழ்வாதாரம் தேடி பதிவு செய்யப்படாத படகுகுள் மூலம் ராமேசுவரத்திற்கு வந்தனர்.
2022ம் ஆண்டில் இங்கு வந்த 96 குடும்பங்களில் 15 ஆண்கள், 95 பெண்கள், 58 சிறுவர்கள், 57 சிறுமிகள் என மொத்தம் 315 பேர் வந்துள்ளனர்.
இவர்களை அகதிமுகாமில் வைத்து தமிழக அரசு தங்கும் இடம், உணவு இவற்றினை வழங்கிவருகின்றது.
தாயகம் திரும்ப கோரிக்கை
இருப்பினும், அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வ அகதி அந்தஸ்து இல்லாததால், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் குறைவாக உள்ளது.
மேலும் உரிய அங்கீகாரம், நிதியுதவி, குழந்தைகளுக்கு கல்வி இவை அனைத்தும் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகின்றது.
வருமானம் இல்லாமல் கைதிகள் போன்று அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறும் அகதிகள், தங்களது தாகமான இலங்கைக்கு திரும்புவதற்கு மத்திய மற்றும் மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இலங்கை அரசும் இலங்கையைவிட்டு வெளியே சென்ற மக்களை மீண்டும் அனுமதிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |