ராமேசுவரத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் - அச்சத்தில் பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த கோவிலைச் சுற்றி 4 பக்கமும் கடல்நீர் சூழ்ந்திருக்கும். காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திலும் புனித நீராடுவது வழக்கம்.
இதனால், ராமேசுவரத்திற்கு சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் கூட்டம் வரும். இன்று (ஞாயிற்றுகிழமை) விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடினர். அப்போது திடீரென 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கி சென்றது.
இதைப் பார்த்த பக்தர்கள் அச்சம் அடைந்தனர். ராமேசுவரம் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அடிக்கடி கடல் உள்வாங்கி வருகிறது.
கடந்த 10 நாட்களாக திடீர், திடீரென கடல் உள்வாங்கியபடி இருப்பதால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ? என்ற ராமேஸ்வரத்தில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைத்திருக்கிறார்கள்.