உயிர் வாழ முடியாத நிலையில் இலங்கை : நகையை விற்று 3 பேர் அகதிகளாக வருகை

By Irumporai Jun 01, 2022 12:58 PM GMT
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதன் காரணமாக நகையினை விற்று அதன் மூலம் அகதிகளாக வந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரிசி, சீனி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்து விட்டது. அதே போல் இதுவரையிலும் இலங்கையிலிருந்து படகு மூலம் 80 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை பேசாலை பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகு மூலம் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரும் பிளாஸ்டிக் படகு மூலம் புறப்பட்டு நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து இன்று அதிகாலை தகவல் கிடைத்ததும் கடலோர போலீசார் விரைந்து சென்று அந்த மூன்று பேரையும் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

உயிர் வாழ முடியாத நிலையில் இலங்கை :  நகையை விற்று 3 பேர் அகதிகளாக வருகை | Rameswaram Refugees Came From Sri Lanka

விசாரணையில் இவர்கள் இலங்கை டெமக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெசிந்தா மேரி (வயது 51), இவரது மகன் பிரவீன் சஞ்சய் (10) மற்றும் மன்னார் மாவட்டம் கொக்கு படையான் பகுதியை சேர்ந்த அனிஸ்டன் (31) என தெரியவந்தது.

 இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால் அங்கு மகனுடன் வாழ முடியாமல் தான் வைத்திருந்த தங்க நகையை விற்று அதில் கிடைத்த ஒன்றரை லட்சம் பணத்தை படகோட்டிக்கு கொடுத்து தமிழகம் தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது கடும் நெருக்கடி நிலை நிலவுவதன் காரணமாக பல்வேறு மக்கள் தமிழகம் வருகின்றனர் தற்போது வந்த மூன்று அகதிகளுடன் சேர்த்து இதுவரையிலும் இ மொத்தம் 83 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.