இன்று வைகாசி அமாவாசை - பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது ராமேஸ்வரம்!

rameswaram amavasai empty places
By Anupriyamkumaresan Jun 10, 2021 07:10 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

கொரோனா தொற்று காரணமாக வைகாசி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்து சுவாமியை வழிபடுவது வழக்கம்.

இன்று வைகாசி அமாவாசை - பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது ராமேஸ்வரம்! | Rameswaram Public Priest Empty Amavasai Day

இந்த நிலையில் கடைசியாக தை அமாவாசை நாளன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வைகாசி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று வைகாசி அமாவாசை - பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது ராமேஸ்வரம்! | Rameswaram Public Priest Empty Amavasai Day

மேலும் ஒருசில வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பூட்டிக்கிடக்கும் ராமநாதசுவாமி திருக்கோயில் நுழைவு வாயில் முன்பாக நின்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.