முழு ஊரடங்கு..! ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்..!
rameswaram
full lockdown
drone police check
By Anupriyamkumaresan
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ராமேஸ்வரத்தில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் எங்கெங்கும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் விதிகளை மீறி வெளியே சுற்றிதிரிபவர்களை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். போலீசாரின் இந்த செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.