பாம்பனில் 2ம் எண் புயல் கூண்டு: ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் 3ம் நாளாக கடல் சீற்றம்..!
dhanushkodi
yaas cyclone
rameswaram
By Anupriyamkumaresan
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக மாறிய நிலையில் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதிகளில் 3ம் நாளாக இன்றும், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டது. பாம்பன் துறைமுகத்தில் நேற்று மதியம் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் இன்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் நேற்று 2 கி.மீ. தொலைவு வரை கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.