Chesssable Master தொடரில் தோல்வியை தழுவினார் பிரக்ஞானந்தா

Rameshbabu Praggnanandhaa
By Nandhini May 27, 2022 06:12 AM GMT
Report

சென்னையைச் சேர்ந்த ரமேஷ், நாகலட்சுமிக்கு மகனாக கடந்த 2004ம் தேதி பிறந்தார் பிரக்ஞானந்தா. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தது இவரது அக்கா வைஷாலி தான். பள்ளியில் அகர எழுத்துக்களை படித்துக் கொண்டிருக்கும்போதே செஸ் விளையாடியும் கற்றுக்கொண்டு பழகியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாம் உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் தொடங்கியது. இப்போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இப்போட்டியில் இறுதியாக ‘டை பிரேக்கர்’ முறையில் வெற்றி வாய்ப்பு இருந்தும், ஒரு தவறான நகர்த்தலால் சீன செஸ் வீரர் டிங் லிரனிடம் தோல்வியை சந்தித்துள்ளார் பிரக்ஞானந்தா.

ஆனால், உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2-வது இடம் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.

10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்ற இவர் இளவயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Chesssable Master தொடரில் தோல்வியை தழுவினார் பிரக்ஞானந்தா | Rameshbabu Praggnanandhaa